1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:11 IST)

கியூப்ஸில் ஓவியம்... சிறுவனை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உருவத்தை கியூப்ஸில் வரைந்த சிறுவனை அவர் பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். அவர், தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். இவர்களுடன் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உருவத்தை கியூப்ஸில் வரைந்துள்ளார் ஒரு சிறுவன்.

கேரள மாநிலத்தில் கொச்சியைச் சேர்ந்த அத்வைத் என்ற சிறுவன் 300 கியூப்ஸைப் பயன்படுத்தி நடிகர் ரஜினியின் உருவப்படத்தினை வரைத்து டுவிட்டரில் வீடியோவாகப் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது.

இதைப்பார்த்த நடிகர் ரஜினிகாந்த், கியூப்களில் ஓவியம் வரைந்த சிறுவனின் திறமையைப் பாராட்டியுள்ளார்.