திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 ஜூலை 2018 (07:37 IST)

நயன்தாராவின் அடுத்த படத்தில் பிஜிலி ரமேஷ்

கடந்த சில நாட்களாக ரஜினியின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ் இணையதளங்களில் டிரெண்டில் இருந்தார். அவரது பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி அவரது பேச்சை பலரும் டப்மாஷ் செய்தனர். 
 
இந்த நிலையில் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்தின் புரமோஷன் வீடியோவில் பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில்   'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற  கபிஸ்கபா என்ற பாடலில் பிஜிலி ரமேஷ் தோன்றுவதை இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இந்த பாடல் நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'கோலமாவு கோகிலா' படத்தில் . நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்திற்கு போட்டியாக வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.