செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (12:04 IST)

"பிகில்" ஆடியோ லான்ச்: இன்று தளபதியின் மேடை பேச்சுடன் இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு!

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 


 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அண்மையில் இப்படத்தில் இடப்பெறும் "சிங்கப்பெண்ணே" மற்றும் வெறித்தனம் என்ற இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதையடுத்து நேற்று "உனக்காக" என்ற ரொமான்டிக் பாடலை வெளியாகி ரெண்டாகி வருகிறது. 
 
இந்நிலையில், இன்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து மேடையில் லைவ்வாக பாடவிருக்கிறர். அதே விஜய்யின் மேடை பேச்சுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்னொரு இன்பச்செய்தி என்னவென்றால் " வெறித்தனம் " பாடலை விஜய் மேடையில் பாடி அசத்தவுள்ளாராம். ஆனால், இதனை வெளியில் சொல்லாமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.