செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (16:00 IST)

தோத்த இடத்துலதான ஜெயிக்க வேண்டும்: பிக்பாஸ் அல்டிமேட் புரமோவில் கமல்!

தோல்வி அடைந்த இடத்தில் தான் ஜெயிக்க வேண்டும் என பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புரமோவில் கமல் கூறியுள்ளார்
 
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதற்காக பிரத்யேக சேனல் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளதாகவும் இதில் 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் கமல்ஹாசன், ‘தோற்ற இடத்தில் தான் ஜெயிக்க வேண்டும் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியாமல் சென்றவர்கள் மீண்டும் அந்த டைட்டிலை வெல்ல ஒரு வாய்ப்பு என்று கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது