வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (22:18 IST)

இந்த வாரம் வெளியேறிய 2 பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள் தான்

Biggboss
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற உள்ளதாக ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம்
 
இந்த வாரம் ஆயிஷா, அசீம், ஜனனி கதிரவன், ஏடிகே மற்றும் ராம் ஆகிய ஆறு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருக்கும் நிலையில் அவர்களில் ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இருவரும் இன்று வெளியேற்றப்பட்டுள்ளதாக   தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இருவருமே கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் சரியாக டாஸ்குகளில் விளையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் எனவே பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர் என்றும் அதனால் தான் இருவருக்கும் வாக்குகள் குறைந்தது என்றும் கூறப்படுகிறது 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர் என்ட்ரி ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva