வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (20:57 IST)

பிக்பாஸ் தமிழ்; இந்த வாரம் வெளியேறுபவர் இவர்தான்!

biggboss
கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா மற்றும் ஷெரினா ஆகிய ஐந்து பேர்கள்தான் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர் 
 
இவர்களில் குறைந்த வாக்குகளை ஷெரினா பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் இந்த வாரம் வெளியேறும் போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது 
 
மேலும் இந்த வாரம் நாமினேஷன்  செய்யப்பட்டவர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் விக்ரமன் என்றும் அவரை அடுத்து அசீம் அதிக வாக்குகள் பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva