சந்நியாசி ரைசானாந்தாவிடம் ஆசி வாங்கும் நெட்டிசன்கள்

Last Modified புதன், 14 ஆகஸ்ட் 2019 (09:52 IST)
பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரையுலகில் ஒரு சில வாய்ப்புகளை பெற்று, கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்

ஹரீஷ் கல்யாண் உடன் இவர் நடித்த 'பியார் பிரேமா காதல்' என்ற திரைப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இதனை அடுத்து தற்போது அவர் ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சாமியார் போல் உடை அணிந்து பக்தர்களுக்கு சீடர்களுக்கு ஆசி வழங்குவது போன்ற ஒரு ஸ்டில் உள்ளது.

இந்த ஸ்டில்லை பார்த்து பலர் கேலியும் கிண்டலும் தெரிவித்து வரும் நிலையில் உண்மையில் ரைசா சன்னியாசியாக மாறிவிட்டாரா? அல்லது ஏதாவது ஒரு படத்தின் கெட்டப்பா இது? என்பது குறித்து நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர். இது குறித்து ரைசாவே விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த புதிருக்கு விடை தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் ரைசா, ரைசானாந்தா சாமியாராக மாறிவிட்டதாக பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :