பிக்பாஸ் லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படத்தை கண்டுபிடித்த நெட்டிசன்கள்

Last Modified ஞாயிறு, 30 ஜூன் 2019 (21:45 IST)
பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு எந்த அளவுக்கு மக்கள் வரவேற்பு அளித்தார்களோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாடல், நடனம், அமைதியான நடத்தை, காமெடி என பாசிட்டிவ் எண்ணங்களுடன் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் லாஸ்லியா இதுவரை எந்த பிரச்சனையிலும் சிக்கவில்லை என்பதும் மற்றவர்களுக்கு இடையே பிரச்சனை நடக்கும்போது தலையிடாமல் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பித்துவிட்ட நெட்டிசன்கள் தற்போது இண்டர்நெட்டில் அவரது பள்ளிக்கால புகைப்படம் உள்பட பல புகைப்படங்களை தேடி எடுத்து வைரலாக்கி வருகின்றனர். அவ்வாறு தேடியதில் ஒரு நெட்டிசனுக்கு சிக்கியது லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம். நயன்தாராவுக்கு போட்டி கொடுக்கும் அளவுக்கு படு கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :