அடேய் அரவேக்காட்டு முட்டா பயலே! ரசிகரை திட்டிய பிக்பாஸ் ஆர்த்தி

aarthi
அடேய் அரவேக்காட்டு முட்டா பயலே! ரசிகரை திட்டிய பிக்பாஸ் ஆர்த்தி
siva| Last Updated: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:31 IST)

இந்தி எதிர்ப்புக் கொள்கை குறித்து விளக்கமளித்த ரசிகர் ஒருவரை அரைவேக்காட்டு முட்டாப் பயலே என பிக்பாஸ் ஆர்த்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த இரண்டு நாட்களாக திடீரென இந்திக்கு எதிராக ஒரு சில திரை உலகினர் கொந்தளித்து வருகின்றனர். ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன் மற்றும் ஹிந்தி தெரியாது போடா என்ற டீசர்ட்டுகளை அணிந்து சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் இந்த டீ சர்ட்டை முன்னணி நடிகர், நடிகைகளோ அல்லது இயக்குனர்களோ அணியவில்லை என்பதும் கிட்டத்தட்ட மார்க்கெட் போன நடிகர், நடிகைகள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மட்டுமே இது குறித்த ஹேஷ்டேக்கை உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து ரசிகர் ஒருவரிடம் காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருந்த பிக்பாஸ் ஆர்த்தி திடீரென அடேய் அரைவேக்காட்டு முட்டாப் பயலே என திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:

அடேய் அரவேக்காட்டு முட்டா பயலே பயிற்று /அதிகார மொழியா ஆங்கிலம் இருக்கே அது மட்டும் உனக்கு இனிக்குதோ?? இந்தி மட்டும் எதிர்க்கிற உன்ன மாதிரி காண்டு படிச்சவன் எண்ணம் ஈடேராது ..போட அங்கிட்டு
நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்...
ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும்பிறந்திருக்கு.. அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம்... இந்தி பட வாய்ப்பு வந்தால் t. Shirtயை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை என்றும்
ஆர்த்தி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :