1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 5 ஆகஸ்ட் 2017 (12:00 IST)

பிக்பாஸ் போட்டியாளர் ஓவியா திரும்பி வருவார்; நம்பிக்கை தெரிவித்த ஆர்த்தி!

பிக்பாஸ் வீட்டில் ஓவியா தொடர்பான சர்ச்சைகளும், சந்தேகங்களும் இருக்கும் நிலையில், நேற்று இரவில் இருந்து பரபரப்பு  அதிகரித்து வரும் நிலையில் ஓவியா தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இது குறித்து விசாரணை செய்வதற்காக போலீஸார் பிக்பாஸ் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

 
பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்ட நடிகை ஓவியா மன அழுத்தம் தாங்க முடியாமல் நேற்றைய  எபிசோடில் திடீரென நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை மேற்கொண்டதாக கூறி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
 
இதனை தொடர்ந்து பிக்பாஸ் பேசுகையில் ஓவியா மேனேஜர், டாக்டர் வந்துகொண்டிருப்பதாகவும் வெளியேறிவிடலாம் என்றும் கூறியிருந்தார். அதே நேரம் இன்று ஓவியா காரில் செல்வது போன்ற புகைப்படம் வைரலாகியது.

 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை ஆர்த்தி, கோடிக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கை வீண்  போகாது. ஓவியா டார்லிங் மீண்டும் நல்ல உடல்நலத்தோடு திரும்பி வருவார் என்ற நம்பிக்கையோடு இருப்போம் என்று டிவீட் செய்துள்ளார்.