காதலனை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் சனம் ஷெட்டி!

Papiksha Joseph| Last Updated: திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:06 IST)

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் முன்னாள் போட்டியாளர் தர்ஷனின் காதலி என்பது ஊரறிந்த விஷயம்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் காதலர் தினத்தன்று தனது புதிய காதலனை அறிமுகம் செய்துள்ளார். அந்த பதிவில், நீ தான் என் உலகத்தை ஒளிரச் செய்வாய் மோனே. இந்த அழகான காதலர் தின விருந்திற்காக நன்றி" என கூறி அவரின் கை பிடித்துக்கொண்டு காதலில் கரைந்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :