வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (21:53 IST)

இது மடோனாவா? குழந்தை பொண்ண பார்த்து குழம்பிப்போன நெட்டிசன்ஸ்!

2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகளும் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளாக மாறினர்.
 
மற்ற இரு நடிகைகளை விட மடோன்னா செபாஸ்டியன் தமிழில் அதிகமான படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளாக அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.அண்மையில் தான் தனது காதலர் ராபி ஆபிரகாமோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 
 
இந்நிலையில் தற்போது மடோனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தங்கையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் இது குழந்தை வயது மடோனாவா? இல்லை ஏதேனும் face app'அ என குழப்பத்தில் கமெண்ட் செய்து பின்னர் தெளிவாகியுள்ளனர்.