1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (13:53 IST)

BiggBoos'ல் இருந்து வெளியேறி ரக்ஷிதா போட்ட முதல் பதிவு!

பிரபல சீரியல் நடிகையான ரக்ஷிதா பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஓரளவுக்கு ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார். மொத்தம்  91 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார். 
 
அவருக்கு 25 லட்சத்துக்கு மேல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ரக்ஷிதா போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
அந்த பதிவில், எனது பயணம் முழுவதும் உங்கள் ஆதரவிற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் இதை என்னால் செய்திருக்க முடியாது. அனைத்து நிபந்தனையற்ற அன்புக்கும் நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். என கூறியுள்ளார்.