"எனக்கு நீ வேண்டாம்" என்னை மன்னித்துவிடும்மா!

Last Updated: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (15:39 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் " உங்கள் வாழ்வில் ஏற்றத்தாழ்வில் உங்களுடன் இருந்து உங்களுக்கு ஊக்கமளித்த நண்பரை பற்றியும் மறக்கமுடியாத நிகழ்வை பற்றியும் பகிர்ந்துகொள்ளவும் என சேரன் முன்னின்று பிக்பாஸ் கொடுத்த அறிவிப்பை வாசிக்கிறார் . 


 
பின்னர், முதலாவது ஆளாக அபிராமி வந்து அவரது அம்மாவை பற்றிய ஒரு சில விஷயங்ககளை பகிர்ந்துகொண்டார். அதாவது " என் அம்மாவை தவிர வேறு யாரும் என்னுடன் அவ்வளவு நெருங்கி பழகியதில்லை... அப்பா, அம்மாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை அதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள். எனது அம்மா எனக்காக நிறைய தியாகம் செஞ்சிருக்காங்க..அதனால் என் அம்மா தான் என்னுடைய ஃபிரண்ட். ஆனால் , எனக்கு நீ வேண்டாம் என்று சொல்லி என் அம்மாவை விட்டுவிட்டு  4 மாதங்களாக பிரிந்திருந்தேன். ஐம் ரியலி சாரி மா"  என்று கூறி கண்கலங்கி அழுதார். 
 
இதனை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர் அபிராமிக்கு ஆறுதல் தெரிவித்து வந்தாலும் ஒரு சிலரோ மறுபடியும் அழுகாச்சி வாரம் என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :