திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (17:25 IST)

நீ தான் பொய்னு பார்த்தா உன் பாய் பிரண்டும் அப்படித்தானா.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி  அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். 


 
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாகிவிட்டார். 
 
என்னதான் அவருக்கு  வாய்ப்பு கிடைத்தாலும் ஜூலி செல்லும் இடமெல்லாம் சிறப்பாக வைத்து செய்வார்கள் நெட்டிசன்கள்.  இவரை கலாய்ப்பதற்கென்று ஒரு தனி கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. 
 
அதற்கு ஏற்றார் போல நம்ம  ஜூலியும் விடாமல் கண்டன்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் ஜூலி மார்க் ஹம்ரான் என்பவருடன் ஊர் சுற்றி திரிவதும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் "ஹீ இஸ் மை பெஸ்டி" என கொஞ்சி குழைவதும் வாடிக்கையாக வைத்துள்ளார்.  விடுவார்களா ஜூலி ஆர்மிஸ்! 
 
இவர்தான் ஜூலியின் பாய்பிரண்ட் என கூறி கலாய்க்க தொடங்கிவிட்டனர். ஆனால் ஜூலி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தன்னுடைய பேஸ்டி என்று கூறி ரஜித் என்பவரை டேக் செத்துள்ளார். இதுநாள் வரை  மார்க் ஹம்ரான் பேஸ்டி என்று கூறிவந்த ஜூலி இப்போது வேறு ஒருவரை பேஸ்டி என்று கூறுவதால், என்ன ஜூலி மார்கை கழட்டி விட்டுட்டாயா என்று பலரும் கிண்டலடித்தனர். 


 
ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த ஜூலி, உண்மையில் அது வேறு யாரும் இல்லை அது மார்க் தான் என்றும், அவர் தற்போது புதிய படத்திற்காக வேறு பெயரில் இந்த கெட்டப்பில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். ஜூலி தான் இப்படி மாத்தி மாத்தி பேசுவாங்கனு தெரியும் அட்லீஸ்ட் மார்க்காவது உண்ணமையென்னனு சொல்லலாம்ல அவரும் ஜூலை மாதிரியே  இருக்காரே!