திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2017 (18:06 IST)

இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு; ஆரவின் போக்கை கண்டித்த ரைசா - வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீடே இரண்டாக பிரிந்துவிட்டது. இரண்டு அணிகளாக பிரிந்து டாஸ்க் செய்யவேண்டும், மேலும் தனித்தனியாக சமைத்து சாப்பிட வேண்டும் எனவும் பிக்பாஸ் உத்தரவிட்டுவிட்டார்.

 
 
நேற்றைய துணிதுவைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், இதே போல இன்னும் சில தினங்களுக்கும் பிக்பாஸ் வீடு  இரண்டாக தான் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கை குழுவில் உள்ள உறுப்பினர்கள் டீம் ஏ-வாகவும், அதில்  சினேகன், ஆரவ், ரைசா, டீம் பி-யில் வையாபுரி, கணேஷ், காயத்ரி என்று பிரிக்கப்பட்டனர். இதில், பிந்துவும், சக்தியும் குவாலிட்டி மேனேஜராக நியமிக்கப்பட்டனர். இதில், துணியை துவைத்து காயவைத்து, சட்டைக்கு பட்டன் தைத்து அயர்ன் செய்ய  வேண்டும் என்பது டாஸ்க். 
 
இந்த டாஸ்க்கில் டீம் ஏ வெற்றி பெற்றதாக பிக்பாஸ் அறிவித்தார். அதனால் சிநேகன் டீமுக்கு 450 புள்ளிகள் கொடுக்கப்பட்டது.  ஆனால், அந்த டாஸ்க் வரும் வியாழன் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ப்ரொமோ வீடியோவில் ஆரவ் காயத்ரியின் கையை அமுக்கி விடுகிறார். அப்போது அங்கு வரும் ரைசா அதனை ஒரு மாதிரியா  பார்த்துவிட்டு செல்கிறார். அதன் பின்னர் பிக் பாஸ் துணிகளை அனுப்ப ஆரவ் ஸ்லைடரில் ஏறி சென்று அமர்ந்து துணிகளை எடுக்கிறார். அப்போது ஷக்தி, காயத்ரி போன்ற எதிர் அணியினர் ஆர்வை கீழே இறங்கி வர சொல்கிறார்கள். குறிப்பாக காயத்ரி  தம்பி நான் சொல்கிறேன் கீழே இறங்கி வா, என் பேச்சை கேள் என்கிறார். உடனே ஆரவ் கிழே இறங்கி வருகிறார்.
 
காயத்ரி சொன்னதும் கீழே இறங்கி வந்ததை பார்த்த ரைசா, ஆரவிடம் நீ ஏன் கீழே இறங்கி வந்தாய், உங்களோட அக்கா, தம்பி  பாசத்தையெல்லாம் வெளியெ வச்சிக்கோங்க என்று பேசுகிறார். இதனால் காயத்ரியும், சக்தியும் ரைசாவை கார்னர் பண்ண தொடங்கி விட்டனரோ என தோன்றுகிறது.