1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (12:36 IST)

பிக் பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் நடப்பவை; வெளிவராத தகவல்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்களை கொண்டுள்ளது. விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தினந்தோறும் யாராவது ஒருவர் சண்டையிடுவது அல்லது அழுவது என பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு எந்த வித வெளியுலகத் தொடரும் கிடையாது என கூறப்பட்டது.

 
பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டிக்குள் போடப்பட்டிருக்கிறது. இதில் காவலுக்காக ஈடுபட்டிருப்பவர்கள் வட மாநிலத்தை சார்ந்தவர்களாம். பிக் பாஸ் வீட்டில் தேவைப்படும் பொருட்களை  கொண்டு செல்லும் சிலர்தான் தமிழ் பேசுபவர்காளாக உள்ளனராம்.
 
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் இரவு நேரத்தில் வெளியே வருகிறார்கள் என கூறப்படுகிறது. இது குறித்து ஒருவர் கூறுகையில், பிக் பாஸ் பிரபலங்கள் செட்டுக்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். இதனை மறுத்து பிரபல தொலைக்காட்சி நிர்வாக தயாரிப்பாளர் கூறுகையில், அதற்கு வாய்ப்பே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகள் மிகவும் கடுமையானவை. அப்படி யாராவது விதிகளை மீறினால் அவர்கள் அகிரிமெண்ட்டை ரத்து செய்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பவை அனைத்தும் ஏற்கனவே சொல்லி கொடுக்கப்பட்டவை என்று, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடக்கும் செய்தியை வலைதள வாசிகள் கலாய்த்தும்  மீம்ஸ் போட்டும் வருகிறார்கள்.