ஆரிக்கு நாங்க இருக்கோம்... அர்ச்சனாவை ரவுண்டு கட்டி தூக்கிய ஹவுஸ்மேட்ஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கிவிட்டது. இதில் போட்டியாளர்கள் இரண்டு பேரை நாமினேட் செய்து அதற்கான சரியான காரணத்தை கூறுகின்றனர். அதில் ஆரி மற்றும் அர்ச்சனா இருவரது பெயர் அடிபடுகிறது.
வீட்டில் உள்ள சில ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அர்ச்சனாவை பிடித்தாலும் வெளியில் உள்ள மக்கள் அனைவரும் அவரை வெறுக்கின்றனர். எனவே மக்கள் ஆதரவு நிச்சயம் ஆரிக்கு தான் உண்டு. பொதுவாகவே யார் நேர்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கும் அப்படித்தான் ஆரிக்கு வீட்டில் எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ளனர்.
இருந்தாலும் அர்ச்சனா அவ்வளவு சீக்கிரம் வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. அவரை வைத்து தான் சண்டை , வாக்குவாதம் என நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆக்குவார்கள். அர்ச்சனாவை மட்டும் அனுப்பிவிட்டால் தாய் இல்லாத பிள்ளைகளின் கஷ்டம் கொடுமையானதாக இருக்கும். எனவே அர்ச்சனாவுக்கு இன்னும் நேரம் இருக்கு..