திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:05 IST)

ஒரே அசிங்கமாக போச்சு குமாரு... அனிதாவை ஏத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் சனம் ஷெட்டி!

நேற்றைய பிக்பாஸில் குடும்ப உறவுகளை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள போட்டியாளர்கள் எந்த உறவை மிஸ் செய்யும்போது இங்கிருக்கும் போட்டியாளர்கள் யார் அந்த உறவை நியாபகப்படுகிறார்கள் என்று பிக்பாஸ் கேட்க அதற்கு ஆளாளுக்கு கண்ணீருடன் தங்களது தங்களது உறவை நினைவு கூறுகிறார்கள்.

அப்படியாக முதலில் அர்ச்சனா தன் அம்மாவை நியப்படுத்துவதாக கூறி ரம்யா பாண்டியன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதேபோல் பாலாஜியை பார்க்கும்போது என் மகன் நியாபகத்திற்கு வருகிறான் என சுரேஷ் கூறி கண்கலங்கினார். பின்னர் அனிதா தன்னுடைய கணவர் பிரபாவை மிஸ் செய்வதாக கூறி கலங்கி அழுதார். கணவரை பற்றியே அதிக நேரம் பேசிய அனிதாவினால் சக ஹவுஸ்மேட்ஸ் சலித்துவிட்டனர்.

இதனால் சம்யுகதா குறுக்கிட்டு போதும் நிறுத்து ரொம்ப நேரம் போகுது என கூற அங்கிருந்த அனைவரும் சிரித்து நக்கல் அடித்தனர். இதனால் கோபப்பட்ட அனிதா பாதியிலே பேச்சை நிறுத்துக்கொண்டு மரண மொக்கை வாங்கிவிட்டார். இந்த ப்ரோமோ நேற்று செம ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் இந்த பிரச்னை குறித்து சம்யுக்தா அப்படி செய்தது தவறு என அனிதாவிற்கு ஆதரவாக சனம் ஷெட்டி பேசுகிறார்.

இதனால் சம்யுக்தா அனிதாவே சும்மா தான் இருக்குறா... இந்த சனம் அவளை ஏத்தி ஏத்தி விட்டு வேடிக்கை பாக்குறதை பாரு என சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் பஞ்சாயத்து பேசுகிறார். எனக்கு என்னவோ சனம் அனிதா பேசவிடலன்னு கவலைப்படல அவங்க பேசும் போது நக்கலா சிரிச்சாங்க அதனால தான் கோவப்படுறாங்க.....நேத்து சொல்ல சொல்லி ஏத்தி விட்டதே ரம்யா தான். இப்ப அப்படியே எஸ்கேப் ஆகிடுச்சு. இதுல அடுத்தவங்களை எஸ்கேப்னு சொல்லி நாமினேட் பண்ணுவாங்க. சம்யுக்தா... ரம்யா கிட்ட பார்த்து இருமா..