செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (18:16 IST)

வீடியோ காலில் மகள் லாலா - மனைவியை கலாய்த்த சாண்டி.!

பிக்பாஸ் சீசன் 3 ஆரம்பித்து 103 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இதனை வாரத்துடன் இந்த நிகழ்ச்சி முடியவுள்ளதால் யார் டைட்டில் கார்டை தட்டி செல்வார் என்பது குழப்பமான ஒன்றாக இருந்து வருகிறது. தர்ஷன் , சேரன் , என நம்பிக்கை வைத்த நபர்கள் வெளியேறியதால்  நிகழ்ச்சியே தலைகீழாக மாறிவிட்டது. 


 
இந்நிலையில் சாண்டி, முகின், லொஸ்லியா , ஷெரின் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதில் முகின் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் இருக்கிறார். லொஸ்லியா டைட்டில் கார்ட் வெல்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என பரவலாக கூறிவருகின்றனர். 
 
இந்நிலையில் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தினரிடம் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேச பிக்பாஸ் அனுமதித்துள்ளனர். அந்தவகையில் லொஸ்லியாவை தொடர்ந்து தற்போது சாண்டி மகள்  லாலாவிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மனைவியிடம் நீ எப்படி மா இருக்க என கேட்டு க்ளோஸ் அப்ல வேண்டாம் மா ரொம்ப பயமா இருக்கு என கூறி கலாய்த்தார்.