இந்த ஆட்டம் எத்தனை நாளைக்குனு பாப்போம்... பிக்பாஸ் முதல் ப்ரோமோ!

Last Updated: திங்கள், 24 ஜூன் 2019 (10:17 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று துவங்கியதை அடுத்து முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
தொலைக்காட்சி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 போட்டியாளர்களையும் நேற்று கமல் ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். 
 
பாத்திமா பாபு, இலங்கை தமிழ்ப்பெண் லொஸ்லியா, நடிகை சாக்சி அகர்வால், நடிகை மதுமிதா, நடிகர் கவின், நடிகர் சரவணன், நடிகை அபிராமி வெங்கடாச்சலம், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குனர் மற்றும் நடிகர் சேரன், நடிகை ஷெரின், நடிகர் மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா, இலங்கை மாடல் தர்ஷன், நடன இயக்குனர் சாண்டி, மலேசிய மாடல் முகன் ராவ் மற்றும் நடிகை ரேஷ்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக நடனமாடுவது போன்று உள்ளது. இந்த ப்ரோமோ இதோ... 


இதில் மேலும் படிக்கவும் :