ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (09:30 IST)

உன்னை நான் முதன்மையானவனாக பார்க்கிறேன்: தனுஷூக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் இமயம்!

நடிகர் தனுஷ் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் 
நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுருவி நம் உணர்வோடு
உறவு கொண்டதாக அமைந்து விடும். 
 
ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான
குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக 
இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவது உண்டு
 
நிஜ வாழ்க்கையில் எப்படியோ, அதை திரையிலும் 
பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே. அதில் உன்னை நான் 
முதன்மையானவனாக பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம், 
விருதுகள் வென்று  குவித்தாலும் ‘நான்’ என்கின்ற அகந்தை 
அற்ற பணிவு, சிறந்த கலை தொழில்நுட்ப அறிவு. இது போதும்டா.. 
இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக்கதவைத் தட்டும்.
 
பேரன்புமிக்க தங்கமகன் தனுஷ் இன்றைய நன்நாளில்
எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ 
வாழ்த்துகிறேன்.
 
 
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.