1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (14:58 IST)

வில்லனாகும் பாரதிராஜா! யாருக்கு தெரியுமா?

தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வசந்த் ரவி, தற்போது அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “ராக்கி” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில்  கதாநாயகனாக நடிக்க உள்ளார்.  


 
இந்த படத்தை RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் . இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார். ஒரு அறிமுக இயக்குனர் படத்தில் பாரதிராஜா வில்லனாக நடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.   இந்த படத்தின் கதை மிக சிறந்த கதையாம். அதோடு பாரதிராஜாவின் இந்த கதாபாத்திரம் அவரின் நடிப்பு உலகிற்கு ஒரு பெரிய மைல்கலாக இருக்குமாம். இந்த படத்துக்கு டர்புகா சிவா இசையமைத்து வருகிறார். இது ஒரு கேங்ஸ்டர் பட கதை என்பது கூடுதல் தகவல்.