திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (14:27 IST)

பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு 2'

பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், 80 மற்றும் 90-களில் பல படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். 
விருப்பம் இல்லாமல் குண்டான பெண்ணை மணந்து தவிக்கும் இளைஞன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி சின்ன வீடு என்ற  திரைப்படத்தை பாக்யராஜ் ,இயக்கி இருந்தார். இப்படம் 1985-ல் வெளியானது. இந்த படத்தில்  பாக்யராஜே கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். ஊர்வசியின் அக்காள் கல்பனா கதாநாயகியாக நடித்து இருந்தார். அனு இன்னொரு  நாயகியாக வந்தார். 
 
இந்த படம் அன்றைக்கு வசூலில் சக்கைபோடு போட்டது, இந்நிலையில் 2010ம் ஆண்டு ‘சித்து பிளஸ்-2’ படத்தை இயக்கினார். அதன் பிறகு  எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார் பாக்யராஜ். இப்போது, சின்ன வீடு 2ம் பாகம் படத்தை இயக்க முடிவு செய்துள்ளதுடன் முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. படத்துக்கான திரைக்கதையை தயார் செய்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.