1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (21:30 IST)

30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பாக்யராஜ்-ஐஸ்வர்யா: ஹீரோ யார் தெரியுமா?

30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் பாக்யராஜ்-ஐஸ்வர்யா: ஹீரோ யார் தெரியுமா?
கடந்த 1992ஆம் ஆண்டு ராசுகுட்டி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் முப்பது ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் 
 
இந்த படத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் பீஸ்ட் நடிகை அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளதாகவும் இந்த படம் காமெடி கலந்த குடும்பத்தை படம் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர் இந்த படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது