செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:33 IST)

வலிமையுடன் மோதாத பீஸ்ட்… ரிலிஸ் எப்போது தெரியுமா?

பீஸ்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டிதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர்.இந்நிலையில் தயாரிப்பாளர் போனிக்கபூர் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளார். வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என சொல்லப்பட்டதால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு (2014 ஆம் ஆண்டில் வீரம், ஜில்லா) விஜய் அஜித் படங்கள் மோதல் இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் பீஸ்ட் படம் அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்குதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.