திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:54 IST)

வெளியானது பீஸ்ட் இந்தி டிரைலர்… அங்கயும் செம்ம வரவேற்பு!

பீஸ்ட் படத்தின் இந்தி டிரைலர் நேற்று மாலை வெளியானதை அடுத்து நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை பீஸ்ட் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியானது. இந்த டிரைலருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வருகிறது.

இதையடுத்து பிறமொழிகளின் டிரைலர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக நேற்று மாலை பீஸ்ட் படத்தின் இந்தி வடிவமான ரா படத்தின் டிரைலரை பாலிவுட் நடிகர் வருண் தவான் வெளியிட்டார். இந்த டிரைலர் இப்போது வட இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.