திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:02 IST)

மாலை வெளியாகப் போகும் பீஸ்ட் அப்டேட் இதுதானாம்!

இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் என்னவென்றால் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பைதான் இப்போது வெளியிட உள்ளார்களாம்.