திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (16:58 IST)

பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் அப்டேட்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் ஆடியோ ரிலிஸ் இந்த மாதம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆகி உள்ளது.

வெளியாகி ஐந்து நாட்களில் 125 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பாட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இந்த பாடலின் அபரிமிதமான வரவேற்பால் இப்போது பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா சென்னையில் வரும் 20 ஆம் தேதி நடக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.