வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (15:47 IST)

ஸ்மூல் ஆப்பில் இளையராஜா பாடல்களுக்கு தடை - காப்புரிமை ஆலோசகர் அதிரடி

ஸ்மூல் ஆப்பிலிருந்து இளையராஜா பாடல்கள் நீக்கப்பட வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் கூறியுள்ளார்.


 

 
தங்களுக்கு பிடித்த பாடலின் பின்னணி இசை மட்டும் இந்த ஸ்மூல் ஆப்பில் இருக்கும். அதில் இரண்டு பேர் பாடும் ஒரு பாடலை தேர்ந்தெடுத்து, மற்றவருடன் ஜோடி போட்டு நாம் அப்பாடலை பாட முடியும். 
 
செல்போன் ஆப்-ஆன இந்த ஸ்மூல் சமீப காலமாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அப்படி, ஜோடிப் போட்டு பாடப்பட்ட பாடல் வீடியோக்கள், சமூக வலைத்தளங்கள் ஏராளமாக வலம் வருகிறது.
 
இந்நிலையில், இந்த செயலி (ஆப்) யில் இருந்து இளையராஜாவின் பாடல்களை நீக்க வேண்டும் என அவரின் காப்புரிமை ஆலோசகர், ஸ்மூல் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த காப்புரிமை ஆலோசகர் பிரதிப் குமார் “ எங்களிடம் அனுமதி பெறாமல் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. எனவே, ஸ்மூல் ஆப்பிலிருந்து அந்த பாடல்களை நீக்க வேண்டும். வணிக ரீதியாக யாரும் அதை பயன்படுத்த முடியாது. உண்மையில், அந்த ஆப்-ஐ பயன்படுத்துபவர்களிடமிருந்து ரூ.1100 வசூலிக்கப்படுகிறது. ஆனால், இசையமைப்பாளருக்கு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. எனவே, இந்த தடையை விதித்துள்ளோம்” என விளக்கம் அளித்தார்.