1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 22 ஜூலை 2017 (19:14 IST)

இனி நாய்க்கு கூட ஜூலி-னு பேர் வைக்க மாட்டேன், தூ...: பிரபல இயக்குனர் காட்டம்!!

என் வீட்டு நாய்க்கு கூட நான் ஜூலி-னு பேர் வைக்க மாட்டேன் என இயக்குனர் சிரிஷ் தெரிவித்துள்ளார். 


 
 
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளுடன் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் அடுத்து கார்னர் செய்யப்படுவது ஓவியா.
 
ஆனால், ஆரவ் மற்றும் சினேகன் ஓவியாவிற்கு சற்று ஆறுதலாக பேசி வருகின்றனர். ஜூலிக்கு பல முறை ஆறுதாலாக இருந்த ஓவியாவை ஜூலி தற்போது வெளியேற்ற துடிக்கிறார்.
 
இதனால், மக்கள் அனைவரும் ஜூலியை பச்சோந்தி என கூறி விமர்சித்து வருகின்றனர். ஓவியாவிற்கு மக்களும் சினிமா பிரபலங்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இப்படி இருக்கையில், பலூன் படத்தின் இயக்குனர் சிரிஷ், என் வீட்டிற்கு நாய்க்கு கூட ஜூலி என்று பேர் வைக்க மாட்டேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.