1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (08:40 IST)

முதல் நாள் முதல் காட்சிக்குப் பிறகு படுத்துவிட்ட பாபா…! ரஜினி போட்ட தப்புக் கணக்கு

பாபா திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக வந்து பார்த்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று பாபா படம் ரி ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் படத்தில் இருந்து அரைமணிநேரம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து பல திரைகளில் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியான நிலையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மற்ற பொதுவான சினிமா ரசிகர்கள் இந்த படத்துக்கு ஆதரவளிக்கவில்லை. இந்நிலையில் படத்தின் சர்ச்சைக்குரிய க்ளைமேக்ஸ் காட்சி இப்போது மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சிக்கு ஆரவாரமான வரவேற்புக் கிடைத்த நிலையில் அதன் பின்னர் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளில் இருந்து எந்த திரையரங்கும் பாதி இருக்கைகளை கூட தாண்டவில்லையாம். மேலும் பல திரைகளில் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே டிக்கெட்கள் விற்பனை ஆனதாகவும் சொல்லப்படுகிறது.