1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Updated : புதன், 3 மே 2017 (15:44 IST)

டி.வி. சீரியலாகிறது ‘பாகுபலி’

இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என்று கொண்டாடப்படும் ‘பாகுபலி’ திரைப்படம் டி.வி. சீரியலாக வெளிவர இருக்கிறது.


 

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என பல நட்சத்திரங்கள் நடித்த படம் ‘பாகுபலி’. இதன் முதல் பாகம் கடந்த 2015ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் கடந்த வாரமும் ரிலீஸானது. அதிக வசூல் சாதனை செய்து, இந்திய சினிமாவின் சரித்திரத்திலும் இடம்பிடித்துள்ளது.
 
இந்நிலையில், ‘பாகுபலி’ கதை டி.வி. சீரியலாக வரப்போகிறது என்று தெரிவித்துள்ளார் ராஜமெளலி. படத்தில் உள்ள கதை இல்லையாம். ஒவ்வொரு கேரக்டரைப் பற்றிய கிளைக்கதையைத்தான் சீரியலாக எடுக்கிறார்கள். உதாரணமாக, மகிழ்மதி தேசத்தின் அடிமையாக கட்டப்பா ஆனது எப்படி, பிறந்தது முதல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது வரையிலான ராஜா மாதாவின் வரலாறு போன்றவற்றை எடுக்கிறார்களாம்.
 
இதற்காக, படத்தின் செட் எதையுமே பிரிக்கவில்லையாம். அடுத்த வருடம் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்கிறார்கள். அத்துடன், இந்தக் கதைகள் புத்தகங்களாகவும் வெளிவரப் போகிறதாம்.