பாகுபலி கதாபாத்திரம் இவருக்காகவே எழுதப்பட்டது: ராஜமௌலி சுவாரஸ்ய தகவல்!
பாகுபலி 2 படம் பல எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. இப்படம் குறித்து ராஜமௌலி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அப்போது, நானும், பிரபாஸும் இதற்கு முன்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றினோம். அதில் இருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளோம். நாங்கள் இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். பாகுபலிக்காக பிரபாஸிடம் ஒன்றரை ஆண்டு டேட்ஸ் கேட்டேன். அவரோ சிரித்துக் கொண்டே இந்த படத்தை ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க முடியாது என்று கூறி மூன்றரை ஆண்டுகளை ஒதுக்கினார். படத்தில் அனுஷ்கா, ரம்யா, சத்யராஜ் ஆகியோரை கதாபாத்திரத்திற்கு ஏற்றவர்கள் என்று தேர்வு செய்தோம். ஆனால் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரம் மட்டும் பிரபாஸுக்காகவே எழுதப்பட்டது என்றார் ராஜமௌலி.