1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 27 மார்ச் 2017 (11:49 IST)

பாகுபலி 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா!

இந்திய சினிமாவையே வியக்க வைத்த பாகுபலி 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு உலகளவில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் பாகுபலி 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் உள்ள  ராமோஜி ஸ்டுடியோவில் நடந்தது.

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரோகிணி,  ஆகியோர் நடிப்பில் பாகுபலி 2வது பாகம் சுமார் ரூ.120 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி  ஆகிய மொழிகளில் வருகிற ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் வெளியான முதல் நாளில் 5 கோடி  பேர் பார்த்து ரசித்தனர்.

 
இதில் பாகுபலி2-ல் நடித்த நடிகர்கள், ஹாலிவுட்,  டோலிவுட், கோலிவுட், இந்தி சினிமாவில் இருந்து பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியை முதம் முறையாக 360 டிகிரி கோணத்தில்,  4கே-வில் ஒளிப்பரப்பினார்கள். மேலும் யூ-டியூப்பில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது. 
 
இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ஹிந்தி பட இயக்குனர் கரண் ஜோகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.