1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 மே 2023 (08:38 IST)

ஏவிஎம் ஸ்டுடியோவில் உருவாகும் ம்யூசியம்… பொதுமக்கள் பார்வைக்கு கட்டணத்தோடு அனுமதி!

தமிழ் சினிமாவின் புராதணமான சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் நிறுவனம் இன்று வரை இயங்கி வருகிறது. ஆனால் சமீப காலமாக படங்களைத் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டு மற்ற பணிகளில் மட்டுமே ஈடுபாடு காட்டியது. ஆனால் இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்க உள்ளது. சமீபத்தில் அருண் விஜய் நடிக்க, ஈரம் அறிவழகன் இயக்கிய தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது.

சென்னை வடபழனியில் இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி இப்போது புதுப்பிக்கப்பட்டு, திருமண மண்டபமாகவும், பொது நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும் இடமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனை ஏவிஎம் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது.

மற்றொரு பகுதி ம்யூசியமாக மாற்றப்பட்டு, ஏவிஎம் ஸ்டுடியோவில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை எல்லாம் வைத்து ஒரு மியூசியமாக மாற்றியுள்ளார்களாம். இதை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதன் பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு ஒரு குறிப்பிட்டக் கட்டணத்தோடு பார்வைக்கு வைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.