திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (09:19 IST)

எல்லா புகழும் இறைவனுக்கே! பிரச்சினைக்கும் கூடவா? – ஏ.ஆர்.ரகுமான் பதில்

நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்ட கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என கூறியுள்ளார்.

ஆஸ்கர் வென்ற முதல் தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 53வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் ’தி ஃபியூச்சர்’ என்னும் புதிய இசை முயற்சியை தொடங்கி வைத்தார்.

தமிழக கிராமங்களில் உள்ள இசையை உலக அளவில் கொண்டு செல்வதே தனது இலக்கு என்று கூறியுள்ளார் ஏ.ஆர் ரகுமான். மேலும் போர், போராட்டம் போன்றவை நடந்து கொண்டிருக்கும் சூழலில் கலைஞர்கள் அழகான படைப்புகளை தர வேண்டும் என கூறியுள்ளார். நாட்டில் சமீப காலமாக நிலவும் பிரச்சினைகள் குறித்து கேட்டபோது ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று கூறி சென்றுள்ளார்.

ஆஸ்கர் விழாவில் சொன்ன அதே வார்த்தையை சொன்னது பகடியாகவா அல்லது பதில் சொல்லாமல் நழுவி கொள்வதற்காகவா என்று சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்து வருகிறது.