“காதல் மன்னனும், 5 ஹீரோயின்களும்” – அதர்வா ஹேப்பி


Cauveri Manickam (Suga)| Last Updated: புதன், 12 ஜூலை 2017 (20:12 IST)
‘காதல் மன்னன்’ பெயரை படத்துக்கு வைத்துவிட்டு, 5 ஹீரோயின்களுடன் நடிக்காவிட்டால் எப்படி? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அதர்வா.

 
 
அதர்வா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. ஆனந்தி, பிரணீதா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என 5 ஹீரோயின்கள் அதர்வா ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, மொட்டை ராஜேந்திரனும் நடித்துள்ளனர். ஓடம் இளவரசு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார்.
 
“காமெடி கதைகளைக் கேட்கும்போது, முதலில் எனக்கு சிரிப்பு வரவேண்டும். அப்படி சிரிப்பு வராத பல கதைகளை ரிஜெக்ட் செய்துவிட்டேன். ஆனால், இந்தக் கதையைக் கேட்ட பத்தாவது நிமிடத்திலேயே முடிவு செய்துவிட்டேன். அந்த அளவுக்கு காமெடியாக உள்ளது” என்கிற அதர்வா, “ஜெமினி கணேசனை ‘காதல் மன்னன்’ என்று குறிப்பிடுவர். அவர் பெயரை வைத்துவிட்டு இத்தனை ஹீரோயின்கள் இல்லையென்றால் எப்படி?! 5 ஹீரோயின்களுடன் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்கிறார்.
 


இதில் மேலும் படிக்கவும் :