திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 14 மே 2018 (11:43 IST)

“சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறது” – ரெஜினா ஓப்பன் டாக்

‘சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறது’ என ஓப்பனாகத் தெரிவித்துள்ளார் ரெஜினா. 
‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கெசாண்ட்ரா. அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும்,  பாண்டிராஜ் இயக்கத்தில் ரிலீஸான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம்தான் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
 
தமிழ் மட்டுமின்றி கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார் ரெஜினா. இவர் கைவசம் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘சிலுக்குவார்பட்டி  சிங்கம்’, ‘பார்ட்டி’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’, இரண்டு தெலுங்குப் படங்கள் என அரை டஜன் படங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, ஹிந்தியிலும்  விரைவில் அறிமுகமாகப் போகிறார்.
 
சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறதா? என இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “ஆமா… சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறது. அதற்காக நான் ரொம்பவே வருத்தப்படுகிறேன். சினிமாவில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் இந்தத் தொல்லை இருக்கவே செய்கிறது. ஆனால், சினிமா என்பதால் சீக்கிரமாகவே வெளியில் தெரிந்துவிடுகிறது.
சிலர், வாய்ப்புக்காக ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்கிறார்கள். அந்தச் சூழ்நிலையை, நாம் தான் தைரியமாகக் கையாள வேண்டும். ஒருவர் நமக்குத்  தொல்லை கொடுத்தால், அதைத் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் தொல்லை கொடுக்கத் தயங்குவார்கள். வாய்ப்புக்காக  எதையும் பண்ண வேண்டும் என அவசியமில்லை” எனப் பதில் அளித்துள்ளார் ரெஜினா.