வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (14:08 IST)

உதவி இயக்குனர் மீது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி புகார்.. தலைமறைவானதால் பரபரப்பு..!

பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

துல்கர் சல்மான் மற்றும் ரக்சன் நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது உதவி இயக்குனர் முகமது இக்பால் என்பவர் மீது மோசடி புகார் அளித்துள்ளார்.  முகமது இக்பால் தன்னிடம் ரூபாய் மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிங்கு பெரியசாமி புகார் அளித்த நிலையில் அவருடைய புகாரின் அடிப்படையில் போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமது இக்பாலை தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva