செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (13:17 IST)

சுந்தர்ராஜன் நலமுடன் இருக்கிறார்; வதந்திகளை நம்ப வேண்டாம் – மகன் ட்வீட்!

நடிகர் சுந்தர்ராஜன் உடல்நிலை சரியில்லை என்று வெளியான தகவல் போலியானது என அவரது மகன் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர் ஆர்.சுந்தர்ராஜன். இவரது இயக்கத்தில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட படங்கள் இன்றும் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளாக உள்ளன. நாளடைவில் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்த சுந்தர்ராஜன் பல படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களையும், காமெரி கதாப்பாத்திரங்களையும் நடித்து முத்திரை பதித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு சுந்தர்ராஜனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் காலமாகி விட்டதாகவும் போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. பலர் அதை நம்பி அவருக்கு இரங்கல்கள் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள சுந்தர்ராஜனின் மகன் அசோக் “என்னுடைய தந்தை சுந்தர்ராஜன் உடல் ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார். அவர் தற்போது சென்னையில் ஒரு படப்பிடிப்பில் உள்ளார். அவர் குறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.