சமையல்காரராக நடிக்கும் கலையரசன்

சமையல்காரராக நடிக்கும் கலையரசன்

Sasikala| Last Modified செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (17:25 IST)
கலையரசன் தனி ஹீரோவாக நடிக்கும் படம், அதே கண்கள். ரொமான்டிக் த்ரில்லரான இதில் கலையரசன் செஃப் ஆக நடிக்கிறார்.

 
சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். 3 பாடல் காட்சிகளை படமாக்கினால் படம் இறுதிகட்டத்துக்கு வந்துவிடும்.
 
படத்தில் ஜனனி, ஷிவதா என இரு நாயகிகள். இதில் ஜனனி ரிப்போர்ட்டராகவும், ஷிவதா சேல்ஸ் கேர்ளாகவும் நடிக்கின்றனர். 
 
நாயகன் மற்றும் இரு நாயகிகளுக்கிடையிலான எமோஷனல் பிளாக்தான் படம் என்றார், இயக்குனர் ரோஹின் செங்கடேசன். இவர் விஷ்ணுவர்தனிடம் அசிஸ்டெண்டாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :