1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 டிசம்பர் 2020 (09:40 IST)

தெலுங்கு நடிகருக்கு வில்லனாக ஆர்யா? விஜய் சேதுபதி நடிக்க மறுத்த வேடத்திலா?

நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வந்தார். இந்த படம் ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இப்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக அவர் நடிக்க உள்ள படங்களின் படப்பிடிப்புகள் இருப்பதால் அதில் இருந்து விலகினார். அதற்கடுத்து பாபி சிம்ஹாவிடம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இப்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இவர் நடிப்பில் மிக விரைவில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாக உள்ளது.