ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (14:11 IST)

கார்த்தி வேண்டாம் என சொன்ன கதையில் நடித்தேன்… இனிமே அத செய்யமாட்டேன் – ஆர்யா புலம்பல்!

2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படம் மூலமாக அறிமுகமான கார்த்தி இதுவரை 24 படங்கள் நடித்துள்ளார். அவரது 25 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் கார்த்தியின் நெருங்கிய நண்பர் ஆர்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது “கார்த்தி வேண்டாம் என நிராகரித்த கதை ஒன்றில் நான் நடித்தேன். ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை. அதன் பிறகு இனிமேல் கார்த்தி வேண்டாம் என சொன்ன கதைகளில் நடிப்பது இல்லை என முடிவு செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.