ஆர்யா பட இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆர்யா திருமணத்திற்குப் பின்னர் அவரது மனைவி சாயீஷாவுட இணைந்து நடித்த படம் டெடி. இப்படத்தை இயக்குநர் சக்தி செளந்தராஜன் இயக்கினார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் டி. இமான் இசையில் அமைந்த பாடல்களும் பெரும்வரவேற்பை பெற்றன. இப்படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் சக்தி செளந்தராஜனனுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு கார் பரிசளித்துள்ளார். இதற்கு இயக்குநர் சக்தி செளந்தராஜன்
தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.