1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (13:54 IST)

மீண்டும் ஆர்யா-ராஜேஷ் எம் இணையும் படம்: ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ இரண்டாம் பாகமா?

boss engira baskaran
மீண்டும் ஆர்யா-ராஜேஷ் எம் இணையும் படம்: ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ இரண்டாம் பாகமா?
ஆர்யா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவான பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துடன் வெளியானது என்பதும் அந்தப் படத்திற்கு கடும் போட்டியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இரண்டாம் பாகம் உருவாக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆர்யா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நாயகியாக நடித்த நயன்தாரா இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா அல்லது வேறு நாயகி நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்