பாரீஸில் பயிற்சி எடுத்த அருண் விஜய்
அருண் விஜய் அடுத்து நடிக்கும் புதிய படத்திற்காக பாரீஸில் பயிற்சி எடுத்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கும் ‘தடம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் அருண் விஜய். இது அவருக்கு 24வது படம். இந்தப் படத்தில் தன்யா, ஸ்ம்ருதி வெங்கட், வித்யா பிரதீப் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். 25வது படம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அருண் விஜய். ஆனால், அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், பாரீஸில் இரண்டு வாரங்கள் கடினப் பயிற்சி எடுத்திருக்கிறார் அருண் விஜய். இரண்டு வாரங்கள் பயிற்சி முடிந்த நிலையில் இன்று சென்னை திரும்புகிறார். இந்தத் தகவலை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.