1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (11:39 IST)

தளபதி 65: ’இந்த’ நடிகை & ’அந்த’ வில்லன் கம் ஹீரோவுடன் பேச்சு??

தளபதி 65 படத்தின் நாயகி மற்றும் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

 
நடிகர் விஜய்யின் 65 வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இயக்குநர் நெல்சன் கோலமவு கோகிலா படத்தை இயக்கியவர் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள டவிஜய்யின் 65 வது படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர்.  
 
தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க முடிவு செய்துள்ளார்களாம். படப்பிடிப்பை மூன்று கட்டமாக நடத்தி முடித்து, அடுத்தாண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்ற பக்கா பிளானுடன் படக்குழு செயல்பட்டு வருகிறதாம். 
 
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவையும் வில்லனாக நடிக்க அருண் விஜய்யுடனும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.