சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (19:19 IST)

அருள்நிதி அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

arulnidhi
அருள்நிதி நடித்துள்ள அடுத்த திரைப்படமான டைரி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
 
அருள்நிதியின் 14வது படமான டைரி திரைப்படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் டைரி  திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் விரைவில் ரிலீஸ் ஆகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
எதான் யோஹனன் இசையில் சேகர் பாபு ஒளிப்பதிவில், ராஜாசேதுபதி படத்தொகுபில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.