45 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெறு 60 ஆயிரம் ரூபாய் மட்டும் வசூல் செய்த படம்… வரலாறு காணாத தோல்வி!
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவுக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்தன. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட் சினிமா மீண்டெழுந்து வருகிறது.
இந்நிலையில்தான் இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே எந்தவொரு படமும் அடையாத தோல்வியை அர்ஜுன் கபூர் நடிப்பில் உருவான ‘லேடி கில்லர்’ படம் அடைந்துள்ளது. 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தில் அர்ஜுன் கபூரோடு பூமி பெத்னேகர் நடித்திருந்தார்.
இந்த படம் திரையரங்குகளில் வெளியான போது டிசாஸ்டர் ஆனது. அதனால் இந்த படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்க முன்வரவில்லை. இந்நிலையில் இப்போது யுடியூபில் இந்த படம் வெளியாகியுள்ளது. மேலும் திரையரங்குகள் மூலமாக சுமார் 66000 ரூபாய் அளவுக்குதான் இந்த படம் வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.